கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மாநகராட்சிக்குட்பட்ட 41ஆவது வார்டு பகுதியில் ஜியோ தொலைத்தொடர்பு கேபிள் ஒயர் பதிக்க சாலையில் பள்ளம் தோண்டப்பட்டது.
அப்போது ஒசூர் மநாகராட்சி மற்றும் பல்வேறு கிராமங்களுக்கு கொண்டு செல்லப்படும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாய் உடைந்து, தண்ணீர் வீணாக சாலையில் ஆறு போல ஓடியது.
இது குறித்து மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் ஊழியர்களிடம் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தும், உடனடியாக சம்பவ இடத்திற்கு யாரும் வாததால் தண்ணீர் அனைத்தும் சாலையில் வீணானது.
மேலும் பல வருடங்களாக ஓசூர் மையப் பகுதியில் அமைந்துள்ள ராமநாயக்கன் ஏரியில் தண்ணீரின்றி வற்றிப் போனதால், நிலத்தடி நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகின்றது,
குடியிருப்பு பகுதிகளில் அமைந்துள்ள ஆழ்துளைக் கிணறுகளிலும் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அவதிபடும் நிலையில், குழாய் உடைந்து தண்ணீர் வீணான இச்சம்பவம்சம் அப்பகுதி மக்களிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
ஆகவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி, தண்ணீர் வீணாவதற்கு காரணமான நபர்கள் மீது கடூம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் கரோனாவிலிருந்து 3,07,677 பேர் குணமடைந்துள்ளனர்- சுகாதாரத் துறை