கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையைச் சேர்ந்த பாண்டியன் குமாரி ராஜேந்திர பாபு, பத்மபிரியா ஆகியோருக்கு 2018 ஆம் ஆண்டு மார்ச்சில் திருமணமானது. தற்போது, இத்தம்பதியினருக்கு ஒரு கைக்குழந்தை உள்ளது. இந்த நிலையில், சமீபகாலமாக பாபுவின் வீட்டார் பத்மபிரியாவை வரதட்சணைக் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்.
ஓராண்டாக நிகழும் இப்பிரச்னையால், மனதளவில் பத்மபிரியா மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்திலும், காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் அளித்திருக்கிறார். இருப்பினும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தனது கணவர் வீட்டாரின் கொடுமை தொடர்பாக, இரண்டு காவல் நிலையத்திலும் பலமுறை புகாரளித்தும், தனது பிரச்னை சரிவர விசாரிக்கப்படவில்லை எனக் கூறிய பத்மபிரியா, இன்று திடீரென கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அவரிடம் காவல்துறையினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: உலக தண்ணீர் தினம்: தண்ணீருக்காக போராடும் காட்டு விலங்குகள்!