ETV Bharat / state

Hosur Airport: கிருஷ்ணகிரியில் விமான நிலையம் அமைக்கும் பணிகள் தொடக்கம் - கிருஷ்ணகிரியில் விமான நிலையம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்நாட்டு விமான நிலையம் அமைக்கும் பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கிஉள்ளது.

domestic airport soon at hosur
author img

By

Published : Dec 29, 2021, 5:19 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்நாட்டு விமான நிலையம் அமைக்கும் முதல்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, தமிழ்நாடு தொழில்வளர்ச்சி நிறுவனம் கூறுகையில், ஒசூரில் உள்நாட்டு விமானநிலையம் அமைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக தொழில் நிறுவனங்கள் கோரிக்கை வைத்துவந்தன.

அதற்கான முதல்கட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன. ஓசூரில் விமான நிலையம் அமைக்க அனைத்து வசதிகளும் கொண்ட இடங்களை தேர்வு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அத்துடன் டெண்டர் கோரும் பணிகளும் தொடங்கி உள்ளன எனத் தெரிவித்துள்ளது. ஓசூர் வேகமாக முன்னேறும் தொழிற்வளர்ச்சி பகுதியாகும்.

இங்கு ஏராளமான வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன. இதன் மூலம் லட்சக்கணக்கான பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. அண்மையில், ஓலா நிறுவனத்தின் இ-பைக் தொழிற்சாலை இங்கு தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உலகின் மிகப்பெரிய பெண்கள் தொழிற்சாலையாகும் ஓலா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.