ETV Bharat / state

'எங்களுக்கு உரிய மரியாதை அளிப்பதில்லை' - திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு - Hosur DMK Councilors boy cott in meeting

கிருஷ்ணகிரி: ஊராட்சிச் செயலாளர்கள், பிடிஓ அலுவலர்கள் திமுக கவுன்சிலர்களுக்கு உரிய மரியாதை அளிப்பதில்லை எனக் குற்றஞ்சாட்டி ஒன்றியக் குழு ஆலோசனைக் கூட்டத்திலிருந்து திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

counsellor
counsellor
author img

By

Published : Jul 25, 2020, 12:14 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஒன்றிய அலுவலகத்தில் 60 நாள்களுக்கு ஒருமுறை நடக்கும் ஆலோசனைக் கூட்டம் நேற்று (ஜூலை 24) மூன்றாவது முறையாக நடைபெற்றது. அதிமுக சார்பில் ஒன்றியக்குழுத் தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் உள்ள நிலையில், 16 உறுப்பினர்களைக் கொண்ட ஒன்றியக் குழுவில் திமுகவின் ஏழு கவுன்சிலர்கள் இதில் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசிய திமுக கவுன்சிலர்கள், ஊராட்சிச் செயலாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (BDO) திமுக கவுன்சிலர்கள் உள்ள பகுதிகளில் முறையாக தகவலளிப்பதில்லை என்றும், தங்களை உரிய மரியாதையுடன் நடத்துவதில்லை எனவும் குற்றஞ்சாட்டி சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினர். ஊராட்சிச் செயலாளர்களின் பணிகள் என்ன எனக் கேள்வி எழுப்பிய திமுக கவுன்சிலர்கள், அதற்குரிய பதில் கிடைக்காததால், திமுகவின் ஏழு கவுன்சிலர்களும் வெளிநடப்பு செய்தனர்.

திமுகவினர் வெளிநடப்பு

அதிமுகவின் சேர்மன் இதுபோன்று நடப்பது சரியல்ல இதுகுறித்து சரியான முடிவு எடுக்காவிட்டால், மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரவிருப்பதாக வெளிநடப்பு செய்த திமுகவினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:'திமுகவில் யாரையும் வளர விடுவதில்லை' அதிமுகவில் இணைந்த முன்னாள் ஒன்றியக் குழு தலைவர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.