கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியமும் பள்ளிக் கல்வித் துறையும் இணைந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கான ஒரு நாள் மின்னணு கழிவுகள் மேலாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் மாசு கட்டுப்பாடு வாரிய மாவட்ட பொறியாளர் பழனிசாமி வரவேற்றுப் பேசினார்.
முகாமில் மாவட்ட ஆட்சியர் பேசும்போது, "நாம் வாழும் இந்த உலகில் நீர், நிலம், காற்று ஆகியவற்றை மாசுப்படுத்தாமல் பாதுகாப்பது நமது கடமையாகும். குப்பைகளில் எப்படி மக்கும் குப்பை மக்கா குப்பை என பிரிக்கபடுகிறதோ அதேபோல், மின்னணு கழிவுகளை பொதுமக்கள் கீழே வீசிவிடாமல் தனியாக சேகரித்து ஒப்படைக்க வேண்டும். தற்போது மின்னணு கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: திடக்கழிவு மேலாண்மை விதிகளுக்கு அனுமதி: தமிழ்நாடு அரசு ஆணை