பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி.யின் பங்குகளை மத்திய அரசு தனியாருக்கு விற்பதை கண்டித்து எல்.ஐ.சி. ஊழியர்கள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் அரசுக்குச் சொந்தமான எல்.ஐசியின் பங்குகளை தனியாருக்கு விற்பதாக அறிவிக்கப்பட்டதையடுத்து எல்.ஐ.சி ஊழியர்கள் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். இதையடுத்து கண்டன ஆர்ப்பாட்டம், பணி புறக்கணிப்பு உள்ளிட்ட போராட்டங்களில் எல்.ஐ.சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கிருஷ்ணகிரியில் உள்ள எல்.ஐ.சி அலுவலகத்தில் பணிபுரியும் சுமார் 70 ஊழியர்கள் ஒரு மணி நேரம் பணிகளை புறக்கணித்து வெளி நடப்பு செய்தனர்.
தொடர்ந்து அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பட்டத்தில் சந்தை பங்கில், பாலிசிதாரர்கள் எண்ணிக்கை ஆகியவற்றில் முன்னிலையில் உள்ள எல்.ஐசியின் பங்குகளை விற்பதை வன்மையாக கண்டிக்கிறோம். மத்திய அரசு எல்.ஐ.சி பங்குகளை தனியாருக்கு தாரைவக்கும் முடிவை கைவிட வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.
இதையும் படிங்க: ’அது ராஜேந்திர பாலாஜியின் தனிப்பட்ட கருத்து; கட்சியின் கருத்து அல்ல’ - அமைச்சர் ஜெயக்குமார்