கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு அம்மாநிலத்தில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு மது பிரியர்களை குறிவைத்து தற்போது தமிழ்நாடு எல்லையில் மிக அருகே 100 மீட்டர் இடைவெளியில் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஓசூர் அக்கம் பக்கம் கிராமங்களிலிருந்து தங்களின் இருசக்கர வாகனத்தில் வரும் மது பிரியர்கள் தமிழ்நாடு எல்லையில் வாகனங்களை நிறுத்திவிட்டு கர்நாடக எல்லைப் பகுதியில் இருக்கிற மதுக்கடையில் மதுபானங்களை வாங்கி செல்கின்றனர். காவல் துறை அவர்களை தற்போது விரட்டி வருகின்றனர்.
தகுந்த இடைவெளி கடைப்பிடிக்காமல் தங்கள் போதை பாதையை மது பிரியர்கள் தேடிச்செல்வதால் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை பெருகும் என பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஏழாம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறப்பு!