கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், ஏழை மக்களின் நலன் கருதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி கிருஷ்ணகிரி மாவட்ட கிழக்கு நகர திமுக சார்பில் நகர செயலாளர் நவாப் மற்றும் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பரிதா நவாப் ஏற்பாட்டில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான செங்குட்டுவன் அத்தியாவசியப் பொருள்களை வழங்கினார்.
5 கிலோ அரிசி, துவரம் பருப்பு ஒரு கிலோ, சர்க்கரை, சமையல் எண்ணெய் ஒரு லிட்டர், துணி துவைக்கும் சோப் 1, டெட்டால் 1, மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள் உட்பட 10 பொருள்கள் அடங்கிய பெட்டிகள், 630-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு 5 லட்ச ரூபாய் மதிப்பில் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் தலைமை கழக பேச்சாளர் கனல் சுப்பிரமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:கரோனா நிவாரண நிதியாக ஒரு நாள் ஊதியத்தை வழங்கிய ஐஎப்எஸ் அதிகாரிகள்