கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 21 கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 20 பேர் பூரண குணமடைந்து, தங்களது வீடுகளுக்கு மாவட்ட மருத்துவ நிர்வாகத்தால் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று (மே 22) பெங்களூரு, சென்னைக்குச் சென்று வந்த ஓசூரைச் சேர்ந்த ஓட்டுநர் ஒருவருக்கு கரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவரை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு சிகிச்சை வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதேபோல், மதுரையில் நேற்று (மே 22) பிற மாநிலங்களில் இருந்து வந்த 32 பேருக்கும் மதுரையில் இருந்த ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து 33 பேரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மதுரையில் இதுவரை 224 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் இதுவரை 111 பேர் முழு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சை பலனின்றி இருவர் மரணமடைந்துள்ளனர்.