ETV Bharat / state

யானை மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்து: யானை கவலைக்கிடம்

கிருஷ்ணகிரி: ஓசூர் நெடுஞ்சாலை அருகே யானை மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில், யானையின் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டதால் உடல் அசைவு ஏதுமின்றி யானை கவலைக்கிடமாக உள்ளது.

யானை மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்து: யானை காவலைக்கிடம்

author img

By

Published : Jan 16, 2021, 3:58 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் பேரண்டப்பள்ளி என்ற பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று நேற்று இரவு(ஜனவரி 15) தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முற்பட்டபோது கன்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யானையின் பின் பகுதியில் உள்ள இரண்டு கால்களில் பலத்த காயம் ஏற்பட்டதால், எவ்வித அசைவும் இன்றி காணப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஓசூர் வனத் துறையினர் நேற்று இரவே(ஜனவரி 15) யானையை மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். இருப்பினும், சிகிச்சையில் எந்த முன்னேற்றமும் இதுவரை ஏற்படவில்லை. யானையின் இரண்டு கால்கள் மற்றும் வால் பகுதி எந்த அசைவும் இன்றி காணப்படுகிறது. இதற்கிடையே யானைக்கு தொடைப்பகுதியில் உள்காயம் ஏற்பட்டுள்ளதைக் கண்டறிந்த வனத்துறையினர், அதற்கான சிகிச்சையை வழங்கி வருகின்றனர்.

விபத்துக்குள்ளான யானை
விபத்துக்குள்ளான யானை

யானை மீது மோதி விபத்து ஏற்படுத்திய கன்டெய்னர் லாரி ஓட்டுநர் சோலைமுத்து என்பவர் மீது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், விபத்து ஏற்படுத்திய லாரியை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். விபத்து ஏற்பட்ட பகுதி, ஏற்கெனவே யானைகள் கடந்து செல்லும் பகுதி என வனத்துறை சார்பில் போதுமான அளவு எச்சரிக்கை பலகைகள் இருந்தும் வாகன ஓட்டுநர், அதனை கவனிக்காமல் வாகனத்தை வேகமாக இயக்கியதால், விபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

யானை மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்து: யானை கவலைக்கிடம்

பேரண்டப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் யானைகள் கடக்கும் வழித்தடம் என்பதால், இப்பகுதியில் ஒளிரும் வகையில் சோலார் மின் விளக்குகளை அமைத்தால், இரவு நேரங்களில் வாகனங்களில் மோதி ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க முடியும் என வன ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.