ETV Bharat / state

'நீர்நிலைகளில் ஏற்படும் மரணங்களைத் தடுக்க சிறப்பு ஏற்பாடுகள்' - கிருஷ்ணகிரி ஆட்சியர்

கிருஷ்ணகிரி: நீர்நிலைகளில் ஏற்படும் மரணங்களை தடுக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

நீர் நிலைகளில் ஏற்படும் மரணங்களை தடுக்க சிறப்பு ஏற்பாடுகள்
author img

By

Published : Oct 7, 2019, 12:22 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செப்டம்பர் 23ஆம் தேதி முதல் இன்றுவரையில் நீர்நிலைகளில் மூழ்கி மொத்தம் 19 பேர் இறந்துள்ளனர். இந்நிலையில் நீர்நிலைகளில் ஏற்படும் மரணங்களைத் தடுக்க மேற்கொள்ளப்பட்டுவரும் பாதுகாப்பு, விழிப்புணர்வு குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் பிரபாகர்

இதில் உரையாற்றிய மாவட்ட ஆட்சியர் பிரபாகர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 23ஆம் தேதி முதல் இன்றுவரையில் நீர்நிலைகளில் மூழ்கி எட்டு மாணவர்கள், எட்டு மாணவியர், பூ வியாபாரி என மொத்தம் 19 பேர் இறந்துள்ளனர். இது மிகவும் கவலைக்குரிய சம்பவமாகும் என வேதனை தெரிவித்தார்.

மேலும், பொதுமக்கள் தங்களின் பிள்ளைகளை நீர்நிலைகளின் அருகில் செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும். ஒவ்வொரு கிராமப் பகுதியிலும் உள்ள நீர்நிலைகளின் அருகில் எச்சரிக்கை பலகை வைத்தும் ஆட்டோ, பேருந்துகளில் நீர்நிலைகளின் பாதுகாப்பு குறித்தும் போதிய விழிப்புணர்வுப் பரப்புரை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

மாணவர்கள் தங்களின் விடுமுறை நாள்களை பாதுகாப்பாக பெற்றோரின் முன்னிலையில் கழிக்க வேண்டும். பெற்றோர் தங்களின் பிள்ளைகளின் மீது தொடர் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தேவையான உதவிகளை மேற்கொள்ள 1077 அவசரகால இலவச தொலைபேசி எண் கொண்ட உதவி மையம் ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு நீர்நிலை பாதுகாப்பு குறித்து ஆசிரியர்கள் அறிவுரை வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இதையும் படிங்க : சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 20 கனஅடி நீர் திறந்துவைப்பு!

Intro:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் பொதுப் பணித் துறை, வருவாய் துறையின் சார்பில் கூடுதல் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப் பட்டு நீர் நிலைகளில் ஏற்படும் மரணங்களை தடுக்க சிறப்பு ஏற்பாடு செய்ய பட்டுள்ளது - மாவட்ட ஆட்சியர் பிரபாகர் செய்தியாளர்களிடம் தகவல்.Body:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் பொதுப் பணித் துறை, வருவாய் துறையின் சார்பில் கூடுதல் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப் பட்டு நீர் நிலைகளில் ஏற்படும் மரணங்களை தடுக்க சிறப்பு ஏற்பாடு செய்ய பட்டுள்ளது - மாவட்ட ஆட்சியர் பிரபாகர் செய்தியாளர்களிடம் தகவல்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 23ம் தேதி முதல் இன்று வரையில் நீரில் மூழ்கி 8 மாணவர்கள், 8 மாணவிகள், ஒரு புதுப்பெண் , ஒரு பூ வியாபாரி, ஒரு அடையாளம் தெரியாத ஆண் என மொத்தம் 19 பேர் இறந்த நிலையில் நீர் நிலைகளில் ஏற்படும் மரணங்களை தடுக்க மேற்கொள்ளப் பட்டு வரும் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுப்பணிகள் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் உரையாற்றிய ஆட்சியர் பிரபாகர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 23ம் தேதி முதல் இன்று வரையில் நீரில் மூழ்கி 8 மாணவர்கள், 8 மாணவிகள், ஒரு புதுப்பெண் , ஒரு பூ வியாபாரி, ஒரு அடையாளம் தெரியாத ஆண் என மொத்தம் 19 பேர் இறந்தனர். இது மிகவும் கவலைக்குரிய சம்பவமாகும். இது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று தேவையான உதவிகள் கிடைக்க மாவட்ட நிர்வாகம் போதிய உதவிகளை செய்யும். பொது மக்கள் தங்களின் பிள்ளைகளை நீர் நிலைகளின் அருகில் செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும். ஒவ்வொரு கிராம பகுதியிலும் உள்ள நீர் நிலைகளின் அருகில் எச்சரிக்கை பலகை வைக்கவும், ஆட்டோ, பேருந்துகளில் நீர் நிலைகளின் பாதுகாப்பு குறித்து போதிய விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள படும். மாணவர்கள் தங்களின் விடுமுறை நாட்களை பாதுகாப்பாகவும், பெற்றோரின் முன்னிலையில் கழிக்கவும் வேண்டும். பெற்றோர் தங்களின் பிள்ளைகளின் மீது தொடர் கவனம் செலுத்த வேண்டும். மாவட்டத்தில் மட்டும் இன்றி அருகில் உள்ள கர்நாடகாவிலும் மழை பெய்து வருவதால், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வருகிறது. கரையோர மக்கள் பாதுகாப்பாக, இருக்க வேண்டும். தேவையான உதவிகளை மேற்கொள்ள 1077 அவசர கால இலவச தொலைப்பேசி எண் கொண்ட உதவி மையம் ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்படுத்த பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு நீர் நிலை பாதுகாப்பு குறித்து ஆசிரியர்கள் அறிவுரை வழங்க கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது என்று கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.