கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பகுதிகளில் சுமார் 500 ஏக்கருக்கு மேல் பஜ்ஜி மிளகாய் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. பஜ்ஜி மிளகாயைப் பொறுத்தவரை வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்தால் மட்டுமே உரிய விலை கிடைக்கும். ஊரடங்கால் ஏற்றுமதி பாதித்துள்ளது.
தமிழ்நாட்டில் விவசாயப் பணிகளுக்கு எவ்வித தடையும் இல்லை என்றாலும், அண்டை மாநிலமான கர்நாடக அரசு விவசாயப் பணிகளை மேற்கொள்ள பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படாமல் மிளகாய்கள் செடியிலேயே வீணாகுவதால், என்ன செய்வதென்று தெரியாமல் விவசாயிகள் விழித்து வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ”வேறு காய்கறிகள் என்றால் நாங்கள் தமிழ்நாட்டிலேயே விற்று விடலாம். ஆனால் பஜ்ஜி மிளாய்களை இங்கு யாரும் அதிகளவு பயன்படுத்துவதில்லை. தற்போது எங்களால் வேறு மாநிலத்திற்கும் ஏற்றுமதி செய்யமுடியாமல் தவித்து வருகிறோம். இதனால் எங்களது வாழ்வாதாரம் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனை மாடுகளும் உண்பதில்லை என்பதால், நாங்கள் பயிரிட்டுள்ள மொத்த மிளகாய்ச் செடிகளையும் வேருடன் பிடுங்கி வீசும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். அதனால் தமிழ்நாடு அரசு விவசாயிகளைக் காக்கும் பொருட்டாக எங்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:கொடைக்கானல் நகர்ப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் - பீதியில் மக்கள்