கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில், முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான மூன்று நாட்கள் விளையாட்டுப் போட்டிகள் திங்கட்கிழமை (பிப். 17) தொடங்கியது. முதல் நாளில் தடகளம், கபடி, குத்துச் சண்டை, நீச்சல் போட்டிகள் நடைபெற்றன. இரண்டாம் நாளில் கூடைப் பந்து, கையுந்து, இறகு பந்து போட்டிகளும், இறுதி நாளான நேற்று (பிப். 19) ஜூடோ, வளை கோல் பந்து, டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றன.
இந்தப் போட்டிகளில் மாட்டவத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த 25 வயதுக்கு உட்பட்டவர்கள் என ஆண்கள் 978 பேரும், பெண்கள் 607 பேரும் கலந்துகொண்டனர். இந்நிலையில் இப்போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசளிப்பு விழா நேற்று நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மண்டல முதுநிலை மேலாளர் பெரியகருப்பன் கலந்துகொண்டு, வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு முதல் பரிசாக ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக 750 ரூபாய்யும், மூன்றாம் பரிசாக 500 ரூபாய்யும் வழங்கினார்.
இதையும் படிங்க: டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரே சிறந்தது - கோலி