கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த சூளகிரி அருகே சின்ன தியகரசனப்பள்ளி கிராமத்தில் மக்களின் பாரம்பரிய விளையாட்டான எருதாட்ட விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டனர். சுமார் 350க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
எருது விடும் விழாவிற்கு காவல் துறையினர் அனுமதி வழங்காத நிலையிலும் சின்ன தியகரசனப்பள்ளி கிராமத்தில் தடையை மீறி எருதாட்ட விழா நடைபெற்றது.
இதில், பேரிகை, பாகலூர், சூளகிரி, உத்தனப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுமார் 350க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டுவரப்பட்டன. காளைகள் துள்ளி குதித்து கட்டுக்கடங்காமல் ஓடிய காட்சி மக்களை உற்சாகப்படுத்தியது.
இதையும் படிங்க: தமிழ்நாடு பாஜக தலைவராக எல். முருகன் நியமனம்