கிருஷ்ணகிரி: சின்ன மட்டாரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர், சின்ன திருப்பதி. கிருஷ்ணகிரி ஆடவர் கலைக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு கணித அறிவியல் படித்து வருகிறார். இதே கல்லூரியில் படித்து வரும் இவரது தங்கைக்கு செட்டியம்பட்டியில் உள்ள ஒரு கல்லூரியைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு பிஏ ஆங்கிலம் படிக்கும் மாணவன் லிங்கேஸ்வரன் காதல் தொல்லை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து இன்று பெண்ணின் சகோதரர் சின்ன திருப்பதி, லிங்கேஸ்வரனை கண்டித்துள்ளார். இதில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் லிங்கேஸ்வரன் மறைத்து வைத்திருந்த கத்தியால் சின்ன திருப்பதி கழுத்தை அறுத்துள்ளார்.
கழுத்து அறுக்கப்பட்டு படுகாயம் அடைந்து, சின்ன திருப்பதி கீழே விழுந்த நிலையில் அவரை மீட்ட அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ராணுவ வீரர் கொலை வழக்கு; மற்றொரு ராணுவ வீரரின் குற்றச்சாட்டிற்கு போலீஸ் பதில்!