ETV Bharat / state

ஸ்டாலின் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு கைப்பாவை - பாஜக - மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்

கிருஷ்ணகிரி: திமுக தலைவர் ஸ்டாலின் பாகிஸ்தானில் உள்ள இம்ரான்கானுக்கு கைப்பாவையாக உள்ளார் என பாஜக தேசியப் பொதுச் செயலாளர் முரளிதர ராவ் குற்றச்சாட்டியுள்ளார்.

பாஜக தேசியப் பொதுச் செயலாளர் முரளிதரராவ்

author img

By

Published : Feb 22, 2020, 11:52 PM IST

கிருஷ்ணகிரியில் மாற்றுக் கட்சிகளில் இருந்து பாஜகவில் இணையும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வீரப்பனின் மூத்த மகள் வித்யா ராணி, பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர்கள் சிவகுமார் மீசை அர்ஜூனன் உள்ளிட்டோர் பாஜகவில் இணைந்தனர்.

மாற்று கட்சியினர் முன்பு பேசும் தேசியப் பொதுச் செயலாளர் முரளிதரராவ்.

இதில், பாஜக தேசியப் பொதுச்செயலாளர் முரளிதரராவ், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர். பின்னர் பேசிய தேசியப் பொதுச்செயலாளர் முரளிதர ராவ்," தமிழகத்தில் பொய் கூறி இனி ஸ்டாலினால் எதுவும் செய்ய இயலாது. குடியுரிமை திருத்தச் சட்டத்தில் இந்திய நாட்டிலோ, தமிழகத்திலோ வாழக்கூடிய இஸ்லாமியர்களுக்கு எதிராக ஏதேனும் ஒரு வரி இருப்பதை திமுக தலைவர் ஸ்டாலின் நிரூபித்தால், நான் அரசியலை விட்டு விலகி வனவாசம் போக தயார்.

தமிழகத்திலும் மத்தியிலும் திமுகவின் கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது தான் இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். இதற்கு ஸ்டாலினால் பதில் கூற முடியுமா? தற்பொழுது இலங்கைத் தமிழர்களின் குடியுரிமை பற்றி ஸ்டாலின் பேசுவது வேடிக்கையாக உள்ளது.

பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள் ஆபத்தில் இருக்கின்றனர். அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமானால் அங்குள்ள இந்துக்கள் இந்தியா வந்தால் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று மகாத்மா காந்தி தெரிவித்து இருந்தார்.

அந்த வழியில்தான் தற்பொழுது பிரதமர் மோடியும், அங்கு சிறுபான்மையாக இருக்கக்கூடிய மக்கள் இந்தியா வந்தால் குடியுரிமை வழங்கப்படும் என தெரிவித்திருக்கிறார். திமுக தலைவர் ஸ்டாலின் பாகிஸ்தானில் இருக்கும் இம்ரான்கானுக்கு கைப்பாவையாக இருக்கிறார். அவ்வாறு செயல்படும் ஸ்டாலினுக்கு தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்" என்று தெரிவித்தார்.

இதையும் பார்க்க: "மிஸ்டு கால் கட்சி, மிஸ்டு கால் தலைவரைத் தேடிக்கொண்டு இருக்கிறது" கீ.வீரமணி அதிரடி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.