ETV Bharat / state

பிணையில் வந்தவர் கடத்தி கொலை - காவல் துறையினர் விசாரணை

பிணையில் வெளியே வந்தவர் பழிக்குப்பழி தீர்க்கப்பட்டாரா அல்லது சொத்து தகராறு காரணமா உள்ளிட்ட கோணங்களில் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

tn_dpi_01_hosur_murder _news_vis_TN10041

author img

By

Published : Jun 23, 2021, 9:48 PM IST

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே கொலை வழக்கில் பிணையில் வந்தவர் காரில் கடத்தி கொலை செய்யப்பட்டது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கங்காபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன்(50). இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொழிலதிபர் நீலிமா என்பவரின் காரின் மீது லாரியை மோதவிட்டு, டிரைவர் உள்ளிட்ட இருவரை கொலை செய்த வழக்கில் 13ஆவது குற்றவாளியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பிணையில் வெளியே வந்த முருகேசனை நேற்று (ஜூன் 22) காலை காமன்தொட்டி என்னுமிடத்தில் காரில் வந்த சிலர் கடத்திச் சென்றதாக சூளகிரி காவலர்களிடம் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். முருகேசனின் உடல் ஓசூர் அருகே உள்ள கொல்லப்பள்ளி என்னுமிடத்தில் செயல்படாத கல்குவாரி நீர் குட்டையில் மிதப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதையறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், முருகேசனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.