ETV Bharat / state

பல ஆயிரம் கிலோ மீட்டர் நடந்தே தமிழ்நாடு வந்த இளைஞர்!

கிருஷ்ணகிரி: கொத்தடிமையாய் வடமாநிலத்திற்கு வேலைக்குச் சென்ற இளைஞர் நடந்தே தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

CORONA
CORONA
author img

By

Published : May 1, 2020, 9:40 AM IST

தமிழ்நாடு எல்லையான ஓசூர் ஜூஜூவாடிக்கு வந்த யுவராஜ் என்ற இளைஞர் விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர். இவர் திருச்சியை சேர்ந்த புரோக்கர் ஒருவர் முலமாக வடமாநிலத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். நல்ல சம்பளம் உள்பட பல வாக்குறுதிகளை நம்பி சென்றவருக்கு ஏமாற்றமே காத்திருந்தது. உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகே கக்கோதா கிராமத்தில் உள்ள தாபாவில் (திறந்தவெளி மது விடுதியுடன் கூடிய உணவகம்) வேலைக்கு சேர்ந்தார்.

வேலைக்குச் சேர்ந்த சில நாள்களில் தனது சொந்த ஊருக்கு திரும்ப நினைத்த இளைஞரை அனுப்ப மறுத்துவிட்டார் தாபா உரிமையாளர். அது மட்டுமில்லாமல் அவரை அடித்து துன்புறுத்தியதோடு தப்பிவிடக் கூடாது என்பதால் தனி அறையில் வைத்து பூட்டியுள்ளார். கரோனா காரணமாக தாபா மூடப்பட்டது. உரிமையாளர் இல்லாததை தனக்கு சாதகமாக்கி கொண்டு மீண்டுவர முயற்சி செய்துள்ளார் யுவராஜ்.

இரண்டு முறை தனது முயற்சி தோல்வி அடைந்தது. இறுதியில் தப்பித்து உத்தரப்பிரதேசத்திலிருந்து மத்திய பிரதேசம் வழியாக சுமார் ஆயிரத்து 260 கிலோ மீட்டர் நடந்தே மகாராஷ்டிரா வந்துள்ளார். இவரின் நிலையை அறிந்த சிலர் அந்த இளைஞரை லாரியில் ஏற்றி அனுப்பியுள்ளனர். கர்நாடகா வந்த யுவராஜ் தமிழ்நாடு எல்லையான ஒசூர் ஜுஜு வாடி சோதனைச் சாவடிக்கு வந்து சேர்ந்துள்ளார்.

பல ஆயிரம் கிலோமீட்டர் நடந்து வந்த இளைஞர்

அங்கு தமிழ்நாடு காவல் துறையினரும், கரோனா நோய் தொற்று தடுப்பு மருத்துவத் துறையினரும் பரிசோதனை செய்தனர். பிறகு அவரை மாவட்ட நிர்வாகம் மூலமாக கரோனா தடுப்பு பாதுகாப்பு முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: கரோனாவை எளிதாக எடுத்து கொள்ளாதீர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.