கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே அசெட்டிபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடசாமி (32). இவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து அசெட்டிபள்ளி பேருந்து நிலையம் அருகேயுள்ள விளையாட்டு மைதானத்தில் மது அருந்தியுள்ளார். அப்போது சக நண்பர்களுடன் வெங்கடசாமி தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தகராறில் அவரது நண்பர்களில் ஒருவரான ரமேஷ், தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் பொட்டலங்களை வெங்கடசாமி மீது வீசி, தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பியோடினார். இதில் பலத்த காயமடைந்த வெங்கடசாமியை மீட்ட அப்பகுதி மக்கள் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மத்திகிரி காவல்துறையினர், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:டெல்லி கலவரம்: வாழ்க்கையை முடித்த வதந்தி.!