ETV Bharat / state

யானையைக் கொன்று வயலில் புதைத்த விவசாயி - கிருஷ்ணகிரி பகீர்

ஓசூர் அருகே விளைநிலத்திற்கு அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி உயிரிழந்த 4 வயது ஆண் குட்டி யானையின் உடலைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. குழி தோண்டி புதைத்த விவசாயி கைது செய்யப்பட்டார்.

யானையை கொன்று வயலில் புதைத்த விவசாயி - கிருஷ்ணகிரி பகீர் சம்பவம்!

author img

By

Published : Nov 22, 2022, 11:05 PM IST

கிருஷ்ணகிரி: ஓசூர் வனக்கோட்டம், காவேரி வடக்கு வன உயிரின சரணாலயம் கடூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி எல்லப்பா (63) என்பவர், தனது நெல் வயலில் சட்டவிரோதமாக மின்சார வேலிகளை அமைந்திருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊடேதுர்க்கம் வனப்பகுதியில் இருந்து குட்டிகளுடன் வெளியேறிய காட்டு யானைகள் எல்லப்பாவின் நெல் வயல் தோட்டம் அருகே சென்றுள்ளது. அப்போது சுமார் 4 வயது மதிக்கத்தக்க ஆண் குட்டி யானை மின்வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது.

இதனைப்பார்த்த விவசாயி எல்லப்பா, இதுகுறித்து வனத்துறையினருக்குத் தெரியப்படுத்தாமல் தனது மகன் முனிராஜ் என்பவரது உதவியோடு அருகில் உள்ள விவசாய நிலத்தில் குட்டி யானையின் உடலை குழி தோண்டி புதைத்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து கடூர் கிராம மக்களுக்குத் தெரிய வந்துள்ளது. மேலும் அப்பகுதியில் கடும் துர்நாற்றமும் வீசியுள்ளது.

கிராம மக்கள் மூலம் தகவல் அறிந்த இராயக்கோட்டை வனத்துறையினர் மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயினி தலைமையில் நேற்று(நவ.21) அப்பகுதிக்குச்சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து குட்டி யானை மின்வேலியில் சிக்கி உயிரிழந்ததையும் அதனை விவசாயி எல்லப்பா குழி தோண்டி புதைத்ததையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து வனத்துறையினர் குட்டி யானை புதைக்கப்பட்ட இடத்தைச்சுற்றி வேலிகளை அமைத்தனர்.

இந்நிலையில், இன்று(நவ.22) மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயினி தலைமையில் கோவை வனத்துறை கால்நடை மருத்துவர் சுகுமார் உதவியுடன் ராயக்கோட்டை வனத்துறையினர் அப்பகுதியில் ஜேசிபி இயந்திரம் கொண்டு குட்டி யானையின் உடலைத் தோண்டி எடுத்தனர். பின்னர் குட்டி யானையின் உடலை அதே இடத்தில் பிரேதப்பரிசோதனை செய்தனர். விசாரணையில் மின் வேலியில் சிக்கி உயிரிழந்த காட்டு யானை சுமார் 4 முதல் 6 வயது இருக்கும் எனவும்,

யானையைக் கொன்று வயலில் புதைத்த விவசாயி - கிருஷ்ணகிரி பகீர்

அதன் உடலில் இருந்த தந்தங்கள் அப்படியே இருந்ததாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர். நெல் வயலில் மின்வேலி அமைத்து குட்டி யானை உயிரிழக்கக் காரணமாக இருந்ததற்காகவும் யாருக்கும் தெரியாமல் அதனை குழி தோண்டி புதைத்ததற்காகவும் வன உயிரினச்சட்டத்தின்படி எல்லப்பாவை வனத்துறையினர் கைது செய்தனர்.

இரவோடு இரவாக குட்டியானையின் உடலை விவசாய நிலத்தில் குழி தோண்டி புதைக்க எல்லப்பாவுக்கு உதவியாக இருந்த அவரது மகன் முனிராஜை வனத்துறையினர் தேடி வருகின்றனர். குட்டி யானையின் உடல் அப்பகுதியில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. குட்டி யானையின் உடல் தோண்டி எடுக்கப்படுவதை அறிந்த கிராம மக்கள் அப்பகுதியில் குவிந்தனர். காவல் துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: Audio Leak: திருச்சி சூர்யாவிற்கு வாய் பூட்டு போட்ட பாஜக; நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.