கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அலசநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் ஊரடங்கு விதிகளை மீறி இருசக்கர வாகனத்தில் சுற்றி திரிந்துள்ளார். அப்போது அவரை மடக்கிய போக்குவரத்து காவலர்கள், முகக்கவசம் அணியவில்லை என கூறி அபராதம் விதித்தனர். உடனே அபராதம் விதித்த காவலர்களிடம், நான் யார் தெரியுமா? என சுரேஷ் வசனம் பேசத் தொடங்கினார்.
மேலும் உதவி ஆய்வாளரிடமும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, முகக்கவசம் அணிய மறுத்து ரகளையில் ஈடுபட்டார். இதனிடையே அவர் மது போதையில் இருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து சுரேஷின் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த காவலர்கள், அவரை எச்சரித்து அனுப்பினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க : கோயில் நிலத்தை ஆக்கிரமித்த திமுக பிரமுகர்: தட்டிக்கேட்டவருக்கு அடி உதை