கிருஷ்ணகிரி மாவட்டதில் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகை மற்றும் மாசி திருவிழாவை முன்னிட்டு, இரண்டு மாதங்களுக்கு எருது விடும் போட்டிகள் நடப்பது வழக்கம். இதன் ஒரு பகுதியாக, கிருஷ்ணகிரி அருகே உள்ள கள்ளியூர் கிராமத்தில் எருது விடும் போட்டி நடைபெற்றது.
இந்த எருது விடும் போட்டியில் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, வேலூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுமார் 240 எருதுகள் அழைத்து வரப்பட்டன. போட்டியில் கலந்துக்கொண்ட எருதுகளுக்கு, கால்நடை மருத்துவர்கள் மூலம் தீவிர பரிசோதனைகள் செய்யப்பட்ட பிறகு, வாடிவாசலுக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் வாடிவாசல் வழியாக இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த காளைகளை மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர்.
இந்த போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட தூரத்தை, குறைவான நேரத்தில் கடந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசுகள் அளிக்கப்பட்டது. மேலும், நடமாடும் கால்நடை சிகிச்சை வாகனும், ஆம்புலன்ஸ் வாகானமும் முன்னெச்சரிக்கையாக கொண்டுவரப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: திமுக சார்பில் தங்க கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி