ETV Bharat / state

கெலரப்பள்ளி அணையில் காட்டு யானைகள் ஆனந்த குளியல்!

கிருஷ்ணகிரி: ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருக்கும் ஆறு காட்டு யானைகளால் அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

ஆனந்தமாய் குளியலிட்டு மகிழும் காட்டுயாணைகள்
author img

By

Published : Apr 24, 2019, 9:01 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசுரில் இருக்கும் கெலவரப்பள்ளி அணையின் நீரை கொண்டு அப்பகுதி முழுவதும் விவசாயம் செய்து, அணை சுற்றிலும் விளைநிலங்களே இருந்துவருகின்றன.

இந்நிலையில், அங்கு ஆறு காட்டுயானைகள் வெயிலின் சூட்டை தணிக்க ஆனந்தமாய் குளியலிட்டு வருகின்றன. ஓசூர் பகுதிகளில் காட்டுயானைகள் எந்த திசைக்கு செல்வதென தெரியாமல் தொடர்ந்து கிராமங்களை சுற்றியேவருகின்றன. இதற்கு, வனப்பகுதியில் நிலவும் வறட்சியே காரணம் என்றாலும், விவசாயிகளும், பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர். வெயில் காரணமாக யானைகளை தற்போது விரட்ட முடியாதென்பதால் வனத்துறையினர் யானைகளை கண்காணித்துவருகின்றனர்.

ஆனந்தமாய் குளியலிட்டு மகிழும் காட்டுயாணைகள்

அணையில் யானைகள் இருக்கின்ற தகவல் வேகமாக பரவியதால் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்க்க குவிந்துவருகின்றனர். ஆபத்தை உணராமல் யானைகளின் அருகில் செல்ல வேண்டாமென்றும், அணையை சுற்றி உள்ள ஆவலப்பள்ளி,நந்திமங்கலம், சித்தனப்கள்ளி, தட்டிகானப்பள்ளி,தேவசெட்டிப்பள்ளி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் தற்போது 6 காட்டுயானைகள் இருந்து வருவதால் அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் அச்சமடைந்து பீதியில் உள்ளனர்.

ஓசூர் அடுத்த அத்திமுகம், ஏ.செட்டிப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் குட்டியானைகளுடன் 12  யானைகள் சுற்றி வந்தன. பின்பு  அங்கிருந்து 6 யானைகள் ஒரு குழுவாக பிரிந்து இரவோடு இரவாக இன்று கெலவரப்பள்ளி அணைக்கு வந்துள்ளன.

கெலவரப்பள்ளி அணையின் நீரை கொண்டு அப்பகுதி முழுவதும் விவசாயம் செய்து, அணை சுற்றிலும் விளைநிலங்களே இருந்து வருகின்றன.

தற்போது 6 காட்டுயானைகள் அணையின் நீரில் வெயின் சூட்டை தணிக்க ஆனந்தமாய் குளியலிட்டு வருகின்றன.

ஓசூர் பகுதிகளில் காட்டுயானைகள் எந்ததிசைக்கு செல்வதென தெரியாமல் தொடர்ந்து கிராமங்களை சுற்றியே வருகின்றன.

வனப்பகுதியில் நிலவும் வறட்சியே இதற்கு காரணம் என்றாலும்,விவசாயிகளும், பொதுமக்களும் அச்சமடைந்து வருகின்றனர்.

வெயில் காரணமாக யானைகளை தற்பொது விரட்ட முடியாதென்பதால் வனத்துறையினர் யானைகளை கண்காணித்து வருகின்றனர்.

அணையில் யானைகள் இருக்கின்ற தகவல் வேகமாக பரவியதால் பொதுமக்கள் ஆர்வமுடன் குவிந்து வருகின்றனர்.

ஆபத்தை உணராமல் யானைகளின் அருகில் செல்ல வேண்டாமென்றும், அணை சுற்றி உள்ள ஆவலப்பள்ளி,நந்திமங்கலம்,சித்தனப்கள்ளி,தட்டிகானப்பள்ளி,தேவசெட்டிப்பள்ளி உள்ளிட்ட 10க்கும் மேற்ப்பட்ட கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வனத்துறையினர் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Visual on ftp
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.