கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகேயுள்ள குப்பநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைராஜ் (57). இவர் நான்கு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் சிங்காரப்பேட்டை காவல் நிலையல் புகார் அளித்தனர்.
அதனடிப்படையில், வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் துரைராஜை கைது விசாரனை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: குற்றவாளிக்குச் சிறை!