கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த அனுமந்தபுரம் கிராமத்தில் அமைந்துள்ள விவசாய நிலத்தில் காவலுக்குச் சிலர் சென்றுகொண்டிருந்தனர். அப்போது திடீரென பத்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் காவலுக்குச் சென்ற நபர்களைத் துரத்தியது.
யானை துரத்தியதில் கீழே விழுந்து மல்லிகார்ஜுனா, ராஜேந்திரன், சிவசங்கரப்பா, ரவி உள்ளிட்ட நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். மேலும், இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
![காட்டுயானை துரத்தியதில் படுகாயம் அடைந்த 4 பேர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-dpi-01-hosur-heliphant-attake-vis-tn10041_09012021165153_0901f_1610191313_832.jpg)
இதனையறிந்த அனுமந்தபுரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்றுதிரண்டு யானைகளை காட்டுப்பகுதிக்கு விரட்டி அடித்தனர். காயமடைந்தை ஆறு பேரும் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பத்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் ராகி, கரும்புத் தோட்டங்களை நாசம் செய்தன. இதில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பயிர்கள் சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.