கிருஷ்ணகிரி அருகே உள்ள சின்னத்தக்கேப்பள்ளி கிராமத்தில் மஹா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு 5ஆம் ஆண்டு மாபெரும் எருதுவிடும் திருவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி தர்மபுரி, வேலூர், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து 270 எருதுகள் கலந்துகொண்டன.
மேலும், போட்டியில் கலந்துகொண்ட எருதுகள் கால்நடை மருத்துவர்கள் மூலம் தீவிர பரிசோதனைகளுக்குள்படுத்தப்பட்ட பிறகே அனுமதிக்கப்பட்டன.
பின்னர், வாடிவாசலுக்கு கொண்டுவரப்பட்ட எருதுகள் ஒவ்வொன்றாக வாடிவாசல் வழியாக விடப்பட்டன. சீறிப்பாய்ந்து சென்ற எருதுகளை மக்கள் உற்சாகப்படுத்தினார்கள்.
இதில் குறிப்பிட்ட தூரத்தை குறைந்த நேரத்தில் கடந்துசென்ற எருதுகளின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசு உள்ளிட்ட 52 வகையான பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இந்த எருதுவிடும் விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனர்.
இதனையும் படிங்க: பரப்புரைக்கு சரக்கு வாகனத்தில் மக்களை ஏற்றிவந்தால் ஓட்டுநர் உரிமம் ரத்து