ETV Bharat / state

சூளகிரியில் 13 காட்டு யானைகள் தஞ்சம் - மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை - வனப்பகுதிக்குள் செல்ல வேண்டா

கிருஷ்ணகிரி: சூளகிரி வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியினுள் 13 காட்டு யானைகள் தஞ்சமடைந்திருப்பதால், பொதுமக்கள் யாரும் வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாமென வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

13-wild-elephants-seek-refuge-in-sulagiri-village

author img

By

Published : Apr 17, 2020, 10:31 PM IST

ஓசூர் வனச்சரகம், சானமாவு உள்ளிட்டப் பகுதிகளில் சுற்றித்திரிந்த 30க்கும் அதிகமான காட்டு யானைகள், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக தமிழ்நாடு எல்லையைக் கடந்து, கர்நாடக மாநில எல்லைக்குள் புகுந்தது. தற்போது கர்நாடக மாநில வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில், யானைக்கூட்டம் இரண்டு, மூன்று குழுக்களாகப் பிரிந்து, நீரைத்தேடி தமிழ்நாடு வனப்பகுதியை நோக்கி படையெடுக்கத் தொடங்கி உள்ளன.

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரையடுத்த சூளகிரி வனப்பகுதியில் 13 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதாக வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 20க்கும் மேற்பட்ட வனத்துறையினர் கண்காணித்து வரும் நிலையில், பொதுமக்கள் யாரும் வனப்பகுதிக்குள் வர வேண்டாமென வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சூளகிரி கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியினுள் 13 காட்டுயானைகள் தஞ்சம்

வனத்துறையினர் விடுத்துள்ள எச்சரிக்கையில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த சூளகிரி வனச்சரகத்திற்குட்பட்ட கிராமத்தினுள் 13 காட்டு யானைகள் தஞ்சமடைந்திருப்பதால், பொது மக்கள் யாரும் வனப்பகுதிக்குள் ஆடு, மாடு மேய்ச்சலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், யானைகளை 20 பேர் கொண்ட வனத்துறைக் குழு கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:துரத்தி வந்த ட்ரோன்! தெறித்து ஓடிய இளைஞர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.