ETV Bharat / state

100 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது மன நிறைவு தான் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி - Corona vaccine

நூறு கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது ஓரளவுக்கு மன நிறைவு கொள்ளுகின்ற விஷயம் தான் என கிருஷ்ணகிரியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்

செலுத்தப்பட்டிருப்பது மனநிறைவைத் தருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்
தமிழ்நாட்டில் 100 % கோடி தடுப்பூசிகள்
author img

By

Published : Oct 21, 2021, 11:10 PM IST

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டினம் அருகே குண்டலபட்டி கிராமத்தில் குழந்தை திருமணம் தடுப்பு மற்றும் இளம் வயது கர்ப்பம் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்று விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியைத் தொடங்கினர்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பின் செய்தியாளர்களிடத்தில்,

தமிழ்நாட்டில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளில், தற்போது 800 மாணவர்கள் சேர்க்கை உறுதி செய்யப்பட்டுள்ளது;

மீதமுள்ள 850 மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக கல்லூரிகளில் உள்ள கட்டமைப்புகள் குறித்து சில தகவல்களை மத்திய அரசு கேட்டிருந்தது.

அவற்றையும் சரி செய்து மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் மத்திய குழு ஆய்வு செய்து, மொத்தமுள்ள 1650 மாணவர்கள் சேர்க்கைக்கான மருத்துவ இடங்களையும் நிரப்பும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது என்று கூறினார்.

என்று  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்
நூறு கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது ஒரளவுக்கு மன நிறைவு கொள்ளுகின்ற விஷயம் தான்

மேலும், இதுவரையில் நாடு முழுவதும் 100 கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் நாட்டின் மக்கள்தொகை 139 கோடி இவற்றில் நூறு கோடி என்பது 70 விழுக்காடாகும். 18 வயது பூர்த்தியானவர்கள் மட்டும் 97 கோடி மக்கள் உள்ளனர். இவர்களுக்கு இரண்டு தவணைத் தடுப்பூசி செலுத்த 194 கோடி தடுப்பூசிகள் தேவை இருப்பதாக தெரிவித்துள்ளார்.

100 % தடுப்பூசிகள்

தற்போது 100 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருப்பது மன நிறைவு கொள்ளுகின்ற விஷயம் தான். இருப்பினும் இது 50% தான். முழுமையாக தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே முழு மனநிறைவு ஏற்படும் என்றும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நாளொன்றுக்கு, இரண்டு கோடியே 72 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இதுவரையில், 5 கோடியே 40 லட்சத்து 8 ஆயிரத்து 27 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. 68% மக்கள் முதல் தவணைத் தடுப்பூசி போட்டுள்ளனர்; 28% இரண்டாவது தவணைத் தடுப்பூசி போட்டுள்ளனர்.

ஐந்தாம் கட்ட தடுப்பூசிகள்

அக். 23 ஆம் தேதி 50 ஆயிரம் இடங்களில் ஐந்தாம் கட்ட தடுப்பூசி போடுவதற்கான மெகா சிறப்பு முகாம் நடைபெற உள்ளது இவற்றில் 50 இலட்சம் மக்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி, சட்டமன்ற உறுப்பினர்கள் பிரகாஷ், மதியழகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் செங்குட்டுவன் முருகன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: அறிவியலை பிராந்திய மொழிகளில் வளர்க்க நடந்த ஒரு நாள் பயிற்சிப்பட்டறை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.