கரூர் மாவட்டம் மதுரை-சேலம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் செயல்பட்டுவரும் மதுபான கடையில் இன்று (டிச.17) மாலை இளைஞர் ஒருவரை நான்கு பேர் கொண்ட கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டி கொன்றுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து வேலாயுதம்பாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். படுகொலை செய்யப்பட்ட இளைஞரின் முகம் சிதைக்கப்பட்டு உள்ளதால் அடையாளம் காணுவதில் காவல்துறையினருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் சிசிடிவி காட்சிகள் ஏதேனும் உள்ளதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: மதுரையில் லஞ்ச ஒழிப்புத் துறை காவல் ஆய்வாளர், மனைவி ஆகியோர் சடலமாக மீட்பு