ETV Bharat / state

அரசுப் பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவர் உயிரிழப்பு - youth death in accident after govt bus hits

கரூர்: திருச்சியிலிருந்து கோவை சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து மோதி கீழே விழுந்த சதீஷ்குமார் (20) என்ற இளைஞர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார்.

youth death in accident after govt bus hits in karur

author img

By

Published : Dec 21, 2020, 7:21 AM IST

Updated : Dec 21, 2020, 9:56 AM IST

கரூர் மாவட்டம், திருச்சியிலிருந்து கோவை நோக்கி சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து ஒன்று கரூர்- திருச்சி சாலையைக் கடந்தபோது, இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த சதீஷ்குமார் என்ற இளைஞர் மீது மோதியது. இதில் சதீஷ்குமார் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.

தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூர் காந்தி கிராமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து அறிந்த பசுபதிபாளையம் காவல் துறையினர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இச்சம்பவம் புலியூர் சுற்றுவட்டாரப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க... சாலையில் நடந்து சென்றவரை குடிபோதையில் தாக்கிய ரவுடிகள்: வைரல் காணொலி

Last Updated : Dec 21, 2020, 9:56 AM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.