கரூர் மாவட்டம் மாயனூர் அருகே உள்ள மகாதானபுரம் பகுதியில் கரூர்-திருச்சி ரயில்வே பாதையில் 25 வயது மதிக்கதக்க இளைஞர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். அதனைத் தொடர்ந்து கரூர் ரயில்வே காவல் துறையினருக்கு நேற்று (ஏப். 23) தகவல் கிடைத்தது.
தகவலின்பேரில் சம்பவ இடம் விரைந்த காவல் துறையினர் ரயில்வே பாதையில் உடல் துண்டான நிலையில், உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் உயிரிழந்த இளைஞர் கோவை மாவட்டம் நீலாம்பூர், அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த சமையல் தொழிலாளி ராமலிங்கம் மகன் திருநாவுக்கரசு (25) என்பது தெரியவந்துள்ளது.
மேலும், ரயிலின் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதற்கான காரணத்தை காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: உயிரைப் பறிக்கும் கரோனா - ஒரே நாளில் 2,624 பேர் பலி!