ETV Bharat / state

தனியார் நிறுவனம்தான் கூடுதல் சம்பளம் அளிக்கிறது - அமைச்சர் - தனியார் நிறுவனம்

கரூர்: படித்த மாணவ-மாணவிகளுக்கு அரசு துறையைக் காட்டிலும் தனியார் துறையில்தான் கூடுதல் சம்பளத்துடன் வேலை வாய்ப்புகள் கிடைத்து வருகிறது என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
author img

By

Published : Aug 10, 2019, 6:47 PM IST

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில் கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. அதில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான கல்லூரி மாணவர்களை தேர்வு செய்தனர். அவர்களுக்கான பணி நியமன ஆணைகளை அமைச்சர் வழங்கினார்.

பின்னர் பேசிய அமைச்சர், "கடந்த முறை நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 22 ஆயிரம் பேர் பதிவு செய்திருந்தனர் அதில் ஐந்தாயிர மாணவ- மாணவிகளுக்கு பணி ஆணை உத்தரவு வழங்கப்பட்டது. படித்த அனைத்து மாணவர்களுக்கும் அரசு வேலை கிடைப்பதில்லை. ஒரு சிலருக்கு மட்டுமே கிடைத்துவருகிறது. ஆனால் தனியார் துறையில் மாணவர்கள் தங்களுடைய திறமைகளைக் காட்டினால் அரசுத் துறையைவிட தனியார் துறையில் அதிக சம்பளம் கிடைக்கப்பெறுகிறது” என்றார்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அன்பழகன் பேசும்போது, "எந்த மாவட்டத்திலும் ஆட்கள் வேலைக்கு தேவை என்று பதாகைகள் வைப்பது இல்லை. ஆனால் கரூர் மாவட்டத்தில் மட்டும் பல இடங்களில் பதாகைகள் வைக்கப்படுகின்றன. இங்கிருக்கும் ஒவ்வொரு தொழிலதிபரும் தங்களுடைய திறமைகளையும், ஒழுக்கத்தையும் காட்டி பணியாற்றுவதால் கரூர் நகரம் தமிழ்நாடு அளவில் மிகவும் சிறப்படைந்துவருகிறது" என்றார்.

விழாவில் கிருஷ்ணராயபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கீதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டிராஜன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் விஜயா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

வேலைவாய்ப்பு முகாமில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பங்கேற்ப்பு

Intro:படித்த திறமையுள்ள மாணவ-மாணவிகளுக்கு அரசு துறையை காட்டிலும் தனியார் துறையில் கூடுதல் சம்பளத்துடன் வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.கரூரில் நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விளக்கம்.
Body:
கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில் கரூர் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது முகாமினை போக்குவரத்துறை அமைச்சர்
எம்.ஆர்.விஜயபாஸ்கர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார் தொடர்ந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன இதில் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான ஆட்களை தனியார் நிறுவனங்கள் தேர்வு செய்தனர்

பின்னர் விழா மேடையில் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் பேசுகையில் கடந்த முறை நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 22 ஆயிரம் பேர் பதிவு செய்திருந்தனர் அதில் 5 ஆயிரம் மாணவ மாணவிகளுக்கு பணி ஆணை உத்தரவு வழங்கப்பட்டது அதேபோல் படித்த அனைவருக்கும் அரசு வேலை கிடைப்பதில்லை ஒரு சிலருக்கு மட்டுமே அரசு பணி கிடைத்து வருகிறது ஆனால் தனியார் துறையில் படித்த மாணவர்கள் தங்களுடைய திறமைகளை காட்டினால் அரசுத் துறையை விட தனியார் துறையில் அதிக சம்பளம் கிடைக்கப்பெறுகிறது

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் பேசும்போது கரூர் மாவட்டம் ஒரு பாரம்பரிய நகரமாகும் எந்த மாவட்டத்திலும் ஆட்கள் வேலைக்கு தேவை என்று பதாகைகள் வைப்பது இல்லை ஆனால் கரூர் மாவட்டத்தில் மட்டுமே ஆட்கள் தேவை என்று பல இடங்களில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது இங்கிருக்கும் ஒவ்வொரு தொழிலதிபர்களும் தங்களுடைய திறமைகளை ஒழுக்கத்தை காட்டி பணியாற்றுவதால் கரூர் நகரம் தமிழக அளவில் மிகவும் சிறப்படைந்து வருகிறது என்று பேசினார்

விழாவில் கிருஷ்ணராயபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கீதா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டிராஜன் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் விஜயா மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் தனியார் வேலைவாய்ப்பு துறை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமன ஆணைகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் மாலையில் வழங்கினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.