ETV Bharat / state

தடைகளை தன்வசப்படுத்திய பெண்: இயற்கை விவசாய ஆசிரியையாக மாறிய பெண் விவசாயி! - Agriculture College

கரூர்: இயற்கை விவசாயம் செய்ய கணவன் உள்பட தடையாக இருந்த அனைவரையும் இயற்கை விவசாயத்திற்கு மாற்றிய பெண் விவசாயி கிருஷ்ணவேணியின் சிறப்புத் தொகுப்பு.

இயற்கை விவசாய ஆசிரியையாக மாறிய பெண் விவசாயி

author img

By

Published : Oct 30, 2020, 9:06 PM IST

Updated : Oct 30, 2020, 10:22 PM IST

இயற்கையாகக் கிடைக்கும் உரங்கள், பூச்சிக் கொல்லிகளை வைத்து விவசாயம் செய்வது இயற்கை விவசாயம் ஆகும். இயற்கையான முறையில் ஆடு, மாடு, கோழி போன்றவற்றை வளர்ப்பதும் ஒரு வகையான இயற்கை விவசாயம் தான். தற்போது பலர் இயற்கை விவசாயத்திற்குத் தங்களை அர்ப்பணிப்பு உணர்வோடு ஈடுபடுத்தி அதிக லாபம் ஈட்டி வருகின்றனர். இன்றையக் காலகட்டங்களில் படித்த மாணவ, மாணவியர் இயற்கை விவசாயத்தில் அதிகம் நாட்டம் கொண்டுள்ளது தான் கூடுதல் சிறப்பு.

குறிப்பாக குறைந்த இடத்தில் அதிக மரம் வளர்ப்பது, மாடியில் காய்கறி வகைகள், சிறுதானிய பயிர் வகைகள் போன்றவைகளை இயற்கையாக வீட்டில் விவசாயம் செய்கின்றனர். முந்தைய காலத்தில் இயற்கையை நேசித்த நாம் பின்னர், காலத்தின் கட்டாயத்தால் செயற்கைக்கு தள்ளப்பட்டோம். அதனை உணர்ந்து, பல இளைஞர்கள், விவசாயிகள் குறிப்பாக பெண்கள் உள்பட பலர் இயற்கை விவசாயம் செய்கின்றனர்.

இயற்கை விவசாயம்

நாட்டின் முதுகெலும்பு விவசாயம்:

இயற்கை விவசாயத்தால், மனிதன் நோயற்ற வாழ்வில் சிறந்து விளங்குவதுடன், நாட்டின் பொருளாதாரம், முதுகெலும்பான விவசாயமும் இணைந்து வளரும். எடுத்துக்காட்டாக தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம் நெல் களஞ்சியமாகத் திகழ்ந்து வருகிறது.

இயற்கை விவசாயத்தின் பயன்கள்:

இயற்கை விவசாயத்தின் மூலம் விவசாய செலவைக் குறைப்பதுடன் சத்தான உணவை உற்பத்தி செய்யமுடிகிறது. இயற்கையாகப் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதன் மூலம் மண் பாதுகாக்கப்படுகிறது. நிலத்தடி நீர் சேமிக்கப்பட்டு, உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள், பழங்கள் நீண்ட ஆயுளுடன் பயன்படுகிறது. பூச்சிக்கொல்லி இல்லாத பூக்கள், பழங்களைத் தேடி தேனீக்கள், வண்ணத்துப் பூச்சிகள் வருவதால் பூச்சி இனங்கள் பாதுகாக்கப்படுகிறது.

தற்போது விவசாயம் உள்பட அனைத்துத் துறைகளிலும் பெண்கள் சாதித்து வந்தாலும், சாதிப்பதற்கு ஏற்படும் தடைகளைக் கடப்பது ஏராளம். ஆம், இயற்கை விவசாயம் செய்ய கணவன் உள்பட தடையாக இருந்த அனைவரையும் விவசாயத்திற்கு மாற்றிய பெண் விவசாயியைப் பற்றி செய்தித் தொகுப்பைக் காண்போம்.

கரூர் மாவட்டம், மண்மங்கலம் பகுதி அடுத்த வரவனை ஊராட்சி பகுதியில் அமைந்துள்ளது கிருஷ்ணவேணியின் தோட்டம். இவர் 20 வருடங்களாக இயற்கை விவசாயம் செய்துவருகிறார். முதலில் கணவன் உள்பட குடும்பத்தினர், உறவினர்கள், ஊரில் உள்ள அனைவரும் இயற்கை விவசாயம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர், பாம்பு வளர்ப்பவள், பைத்தியக்காரி என்றெல்லாம் விமர்சித்தவர்கள் தற்போது கிருஷ்ணவேணியை தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றனர்.

காரணம், இங்கு உற்பத்தி செய்யப்படும் உணவுப்பொருள்கள் சுவையாக இருப்பதால் விரும்பி வந்து வாங்கிச் செல்கின்றனர். ஏனென்றால் இத்தோட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பழங்கள், காய்கறிகள் அனைத்தும் பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படாமல் இயற்கையான முறையில் சுவையாக இருப்பது தான். இதனால் கிருஷ்ணவேணி தோட்டத்தில் விளையும் பழங்களுக்கு மவுசு அதிகம்.

அதைவிட குறிப்பாக விவசாயக் கல்லூரி மாணவ, மாணவியர் வந்து பயின்று செல்லும் அளவிற்கு கிருஷ்ணவேணி தோட்டம் இயற்கை விவசாயத்திற்கு மிகவும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

விவசாய ஆசிரியையாக மாறிய பெண் விவசாயி

இதுகுறித்து ஈடிவி பாரத், விவசாயி கிருஷ்ணவேணியிடம் பேசியபோது,

“கடந்த இருபது ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்துவருகிறேன். இயற்கை விவசாயத்தின் மீது ஆர்வம் வரக்காரணம் விவசாயக் குடும்பத்தில் பிறந்ததால் தான். இயற்கை விவசாயத்தில் சாதிப்பதற்கு முக்கிய காரணம் வேளாண்மை துறையின் சார்பில் நடத்தப்பட்ட இயற்கை விவசாய விழிப்புணர்வு, செய்முறை தான்.

செயற்கை விவசாயத்தின் மூலம் நோய்கள் வருவதால் இயற்கை விவசாயத்திற்கு தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்டு இயற்கையான முறையில் மண்புழு, ஜீவாமிர்தக் கரைசல் போன்றவற்றை வைத்து இயற்கை விவசாயம் செய்துவருகிறேன். இயற்கை விவசாயத்தைப் பொறுத்தவரை அதிக வருமானம் வராவிட்டாலும் ஓரளவு வருமானம் கண்டிப்பாக எனக்கு வருகிறது.

இயற்கை விவசாயத்திற்கு மாறிய பின்பு கணவன் உள்பட உறவினர்கள் அனைவரும் எதிர்த்தனர், என்னைக் கேலி கிண்டல் செய்தனர். ஆனால் தற்போது அனைவரையும் இயற்கை விவசாயத்திற்கு மாறி அவர்களும் என்னுடன் பயணித்து வருகின்றனர். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது“ எனக் கூறினார்.

இதுகுறித்து கிருஷ்ணவேணியில் தோழி மலர்விழி கூறுகையில்,

“கடந்த ஆறு ஆண்டுகளாக கிருஷ்ணவேணியை பார்த்து இயற்கை விவசாயம் செய்துவருகிறேன். இயற்கையான முறையில் பஞ்சகாவியம், ஜீவாமிர்தக் கரைசல், பசுமாட்டு சாணம் ஆகியவற்றை இயற்கையான முறையில் தயாரித்து தோட்டத்தில் உள்ள அனைத்து காய்கறிகள், பழங்கள் அனைத்திற்கும் அளித்துவருகிறோம். தற்போது வாழைப்பழம், பப்பாளி, தென்னை, காய்கறிகள் ஆகியவற்றுக்கு நல்ல மதிப்பு இருக்கிறது. நாங்கள் இயற்கைக்கு முழுவதுமாக மாறிவிட்டோம். தொடர்ந்து மற்றவர்களையும் மாற வலியுறுத்துகிறோம்” எனத் தெரிவித்தார்.

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயக் கல்லூரி மாணவன் பரத் தெரிவிக்கையில்,

“கரோனா தொற்று காரணமாக, கல்லூரியில் மூன்றாமாண்டு பயிலும் மாணவர்களின் களப்பணி அந்தந்த மாவட்டத்தில் கற்று சமர்ப்பிக்க கல்லூரி அனுமதித்துள்ளது. இதனடிப்படையில் இயற்கை விவசாயம் செய்துவரும் கிருஷ்ணவேணி குறித்து விவசாயத் துறை அலுவலர்களிடம் கேட்டு தெரிந்துகொண்டு கிருஷ்ணவேணி தோட்டத்திற்கு வந்து இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் பூச்சிக்கொல்லி, இயற்கை விவசாயத்தைக் பற்றி கற்றுக் கொண்டோம்” எனத் தெரிவித்தார்.

இயற்கை விவசாயம் செய்வதற்கு தேவையான சான்றிதழ் பெறுவது குறித்து விவசாய கல்லூரி மாணவன் கிஷோர் தெரிவிக்கையில்,

“கரூர் மாவட்டத்தில் கிருஷ்ணவேணி 20 ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்து பல துறைகளில் சான்றிதழ் வாங்கியுள்ளார். இயற்கை விவசாயத்தைப் பொறுத்தவரை தனியாக செய்வதைவிட கூட்டு முயற்சியாக செய்தால் அதிக லாபத்தை பெறலாம். மேலும் இயற்கை விவசாயம் செய்வதற்கு தரச் சான்றிதழ் உள்ளது. அதனை பெற்றுக் கொண்டால் இயற்கை அங்காடியிடம் உணவுப்பொருள்களை இரு மடங்கு விலைக்கு விற்கலாம். அதனைப் பெறுவதற்கு 5 இயற்கை விவசாயிகளும் மற்றும் நிலமும் தேவை. மேலும் அவர்களின் நிலத்தில் மூன்று ஆண்டுகளாக எந்த ஒரு ரசாயனமும் பயன்படுத்தவில்லை எனப் பரிசோதனை உறுதியான பின்னர் அதற்கான சான்றிதழ் வழங்கப்படும்.

இயற்கை விவசாயத்தில் பலர் திரும்பினாலும், இனிவரும் காலங்களில் இயற்கை விவசாயத்திற்கான பல தேவைகள் ஏற்பட்டுள்ளது. இதனால் ரசாயனம் கலந்த உணவுகளை விட இயற்கையாகக் கிடைக்கும் உணவுகளுக்கு விலை சற்று அதிகரித்து காணப்படுகிறது. இதனால் இயற்கை விவசாயம் செய்தால் அதிக லாபம் பெற முடியும் என்பதற்கு கிருஷ்ணவேணி ஒரு உதாரணம் ஆகும்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: மின்சாரம் இல்லாமல் தவிக்கும் பழங்குடியின மக்கள்

Last Updated : Oct 30, 2020, 10:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.