கரூர் மாவட்ட நீதிபதி கிரிஸ்டோபர் மாணவர்கள் வங்கியில் வாங்கிய கல்விக்கடனை வங்கியுடன் சமரசம் பேசி முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, 'வருகின்ற டிசம்பர் 14ஆம் தேதி 'மெகா லோக் அதாலத்' எனப்படும் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற இருக்கிறது. மாநிலம் முழுவதும் நிலுவையில் உள்ள வழக்குகள் சமரசம் செய்துகொண்டு தீர்த்து வைக்கும் நோக்கில் மக்கள் நீதிமன்றம் கொண்டுவரப்பட்டுள்ளது' என்றார்.
மேலும் அவர், 'தனியார் வங்கிகளில் தரப்பட்ட கடன்கள் மீதான நிலுவையில் உள்ள வழக்குகள் தினம்தோறும் நடைபெறுகிறது. மாணவர்கள் கல்விக்கடன் பெற்றிருந்தால் வட்டித்தொகையினை வங்கியிடம் பேசி குறைக்கப்படும் அதனால் மாணவர்கள் இதனை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' எனவும் கூறினார்.
இதையும் படிங்க: திருச்சியில் 45,185 வழக்குகள் நிலுவை - நீதிபதி முரளி சங்கர்