ETV Bharat / state

'அளித்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவேன்' - எம்.ஆர்.விஜயபாஸ்கர் - தேசிய ஜனநாயக கூட்டணி

தேர்தலில் வெற்றி பெற்றால் அளித்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றித் தருவேன் என கரூர் நகரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

will definitely keep romises Transport Minister Vijayabaskar has been collecting votes in Karur

author img

By

Published : Mar 21, 2021, 10:50 AM IST

கரூர்: தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் கரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் நகராட்சிக்குள்பட்ட எல்.ஜி.பி நகர், ராமானுஜம் நகர், குமரன் நகர், ஆசிரியர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்.

அதேபோல கரூர் நகராட்சிக்குள்பட்ட வஞ்சியம்மன் கோயில் தெரு, ரத்தினம் சாலை, காமராஜர் ரோடு, மேட்டுத்தெரு, வளையல்கார தெரு உள்ளிட்ட பகுதிகளிலும், வீதிவீதியாகச் சென்று அவர் வாக்காளர்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது, கரூர் நகராட்சிப் பகுதிகளில் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்தித் தருதல், தற்போது சாக்கடையாக சென்று கொண்டிருக்கும் ராஜ வாய்க்கால் தூர்வாரும் பணியை விரைவுபடுத்துதல் உள்ளிட்ட தாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவதாக அவர் உறுதியளித்தார்.

வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவேன் - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

மேலும், ”கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக அரசு எண்ணற்ற திட்டங்களை ஏழை எளிய மக்களுக்கு வழங்கியுள்ளது. மீண்டும் அதிமுக அரசு அமைய அனைவரும் வாய்ப்பு அளியுங்கள். கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிச்சயம் உங்களுக்கு நிறைவேற்றித் தருவேன்” எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.