கரூர்: கிருஷ்ணராயபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட கட்டளை அருகே உள்ள நத்தமேடு அமராவதி ஆற்றங்கரை ஓரம் வனத்துறைக்கு சொந்தமான 25 ஏக்கர் பரப்பளவு கொண்ட வனப்பகுதி உள்ளது.
இப்பகுதியில், யூகலிப்டஸ் எனும் தைல மரம் அதிகளவில் நட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று (மே 9) மதியம் திடீரென தீ பிடித்து அக்காடு முழுவதும் மளமளவென்று எரிந்தது.
இதுகுறித்து, கிராம நிர்வாக அலுவலர் நல்லசாமி தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தார். பின்னர், கரூர் தீயணைப்பு துறை அலுவலர் விஜயகுமார் தலைமையில் தீயை அணைக்கும் பணியில் 5க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறை வீரர்கள் ஈடுபட்டனர். சுமார், மூன்று மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதையும் படிங்க: கரோனா சிகிச்சைக்கு ரூ. 2 லட்சத்துக்கும் மேல் பரிவர்த்தனை செய்யலாம்!