ETV Bharat / state

வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டுவரப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் - கரூர் செய்திகள்

கரூர்: வாக்கு எண்ணும் மையத்திற்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு வரும் பணி நடைபெற்று வருகிறது.

வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டுவரப்படும் வாக்குப் பதிவு இயந்திரங்கள்

author img

By

Published : Apr 7, 2021, 7:38 AM IST

கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் நேற்று (ஏப்ரல்.06) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 7 மணி வரை அமைதியாக நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் கரூர் மாவட்டத்திலுள்ள அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம் தனி, கரூர் உள்ளிட்ட நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள ஆயிரத்து 247 வாக்குச்சாவடி மையங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை உரிய பாதுகாப்புடன் கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தளவாபாளையம் குமாரசாமி பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரும் பணி நடைபெற்று வருகிறது.

ஏப்ரல் 6ஆம் தேதி இரவு 11 மணிக்கு தொடங்கிய இந்தப் பணியானது தொடர்ந்து இன்று அதிகாலை வரை நடைபெற்று வருகிறது. அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்ட பிறகு வேட்பாளர்கள், தேர்தல் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்படவுள்ளன.

தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2ஆம் தேதி வரை அடுத்த 24 நாள்களுக்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு, சிசிடிவி கண்காணிப்பு என 24 மணி நேரம் துணை ராணுவப் படை பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளது.

இதையும் படிங்க: ஆபாச வார்த்தைகள் கூறி அமைச்சரை தாக்க முற்பட்ட திமுகவினர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.