கரூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரையை ஆதரித்து அமைச்சர் விஜயபாஸ்கர் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர், 'முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இல்லாத முதல் தேர்தல் இது. அதிமுகவுடன் யாரும் கூட்டு சேர மாட்டார்கள் என திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்பார்த்தனர்.
ஆனால் இப்போது மெகா கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலை சந்திக்கிறோம். நிச்சயம் இந்த கூட்டணி வெற்றிபெறும். இந்தியாவில் முதன் முறையாக ஏழை எளிய மக்களுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கிய பெருமை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சாரும்.
உங்களது கோரிக்கை எதுவாக இருந்தாலும் அதைக் கேட்டு செய்துதர நாங்கள் இருக்கிறோம். அதுபோல எங்களுடைய ஒரே ஒரு கோரிக்கையை ஏற்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களியுங்கள்' என்று அவர் கேட்டுக்கொண்டார்.