ETV Bharat / state

கரூரில் சத்துணவு முட்டைகளில் புழுக்கள் - வைரலாகும் வீடியோ - warm on rotten egg at a government school near karur

கரூர் அருகே பள்ளியில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டு இருந்த சத்துணவு முட்டைகளில் அழுகி புழுக்கள் இருந்தன.

சத்துணவு முட்டை  புழு  சத்துணவு முட்டைகளில் புழு  சத்துணவு முட்டைகளில் புழுக்கள்  கரூரில் சத்துணவு முட்டைகளில் புழுக்கள்  வைரல் வீடியோ  rotten egg  egg  warm on rotten egg  warm on rotten egg at a government school near karur  viral video
சத்துணவு முட்டை
author img

By

Published : Oct 29, 2021, 11:16 AM IST

கரூர்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், தொண்டமாங்கிணம் ஊராட்சி, கவுண்டம்பட்டியிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அமைந்துள்ளது.

இங்கு சுமார் 250 மாணவர்கள் படித்து வருகின்றனர். கரோனா கட்டுபாடு காரணமாக பள்ளிகள் மூடியிருப்பதால் மாணவர்களுக்கு வாரந்தோறும் சத்துணவில் அரிசி, பருப்பு, முட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வழக்கம் போல் நேற்று (அக்.28) மாணவர்கள் பெற்றோருடன் சத்துணவு உணவை வாங்க வந்துள்ளனர். அப்போது மாணவர்களுக்கு வழங்க தயாராக வைக்கப்பட்டிருந்த முட்டைகள் அழுகி புழுக்கள் வைத்து துர்நாற்றம் வீசி உள்ளது. இதைப் பார்த்த மாணவர்கள், பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பான காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மாணவர்களுக்கு வழங்கும் முட்டைகளில் புழு

இதையடுத்து மாணவர்களுக்கு வழங்கப்படும் முட்டைகள் தரமாக உள்ளதா எனப் பரிசோதித்து வழங்க வேண்டும். மேலும் முட்டை டெண்டர் எடுத்தவர்கள் பள்ளிகளுக்கு வழங்கும் முட்டைகளை தரமானதாக வழங்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: ஈடிவி பாரத் எதிரொலி - நோய் பரவும் வகையில் கொட்டப்பட்ட மருந்துக் கழிவுகள் அகற்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.