நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் திமுக தலைமையிலான கூட்டணி 37 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மக்களவையில் திமுக மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. மேலும், சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் விசிக சார்பில் போட்டியிட்ட தொல்.திருமாவளவன் நீண்ட இழுபறிக்கு பிறகு உறுதியான வெற்றியை பெற்றார்.
இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மக்களவை உறுப்பினராக தேர்வானதை கொண்டாடும் விதமாக கரூர் மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர். விசிக கல்வி பொருளாதார விழிப்புணர்வு இயக்க மாவட்ட அமைப்பினர், வழக்கறிஞர் பிரிவு தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி சிறப்பித்தனர்.