கரூர் மாவட்டம் வாங்கல் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தவிட்டுபாளையம் பகுதியில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத மூதாட்டியின் உடல் காவிரி ஆற்றின் மணல் திட்டில் மாட்டிய நிலையில் கரை ஒதுங்கியது.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் வாங்கல் காவல் நிலையத்துக்கு புகார் அளித்தார். இதன்பேரில் விரைந்துவந்த காவலர்கள் அடையாளம் தெரியாத இறந்த மூதாட்டியின் உடலை மீட்டு கரூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர்.
மேலும் இது தொடர்பாக வாங்கல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அழகு ராம் காவிரி ஆற்றில் மூழ்கி இறந்த மூதாட்டி குறித்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்.
ஆற்றில் தவறி விழுந்தாரா, தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்றுவருகிறது.
இதையும் படிங்க: விருதுநகர் பைக் விபத்து: ஒருவர் மரணம், மற்றொருவர் படுகாயம்!