தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் நலத்திட்டங்கள் வழங்கும் விழா கரூரில் உள்ள திருவள்ளுவர் மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தேசிய முதியோர், விதவைகள், கணவரால் கைவிடப்பட்டவர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு உதவி தொகை அளிக்கப்பட்டது.
மேலும் அவர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம், சலவைப் பெட்டி வழங்குதல், தையல் இயந்திரங்கள் வழங்குதல் உள்ளிட்ட நலத் திட்டங்களை 2,757 பயனாளிகளுக்கு சுமார் ரூ. 98 கோடி மதிப்பில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன், மாவட்ட வருவாய் அலுவலர், சட்டப்பேரவை உறுப்பினர் கீதா திட்ட அலுவலர், கரூர் நகராட்சி ஆணையர் உட்பட கரூர் ஒன்றியத்திற்குட்பட்ட பயனாளிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதையும் படியுங்க: அரசுக்குச் சொந்தமான கோயில் இடத்தினை மீட்ட அரசு அலுவலர்கள்!