ETV Bharat / state

இரு ஆசிரியைகளை கத்திமுனையில் மிரட்டி தங்க நகைகள் பறிப்பு - karur latset news

கரூர்: பட்டப்பகலில் ஒரே நேரத்தில இரு ஆசிரியர்களிடம் கத்தியைக்காட்டி மிரட்டி நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

gold jewelry
gold jewelry
author img

By

Published : Oct 22, 2020, 8:27 AM IST

கரூர் மாவட்டம் தாந்தோணி ஒன்றியத்திற்குட்பட்ட ஏமூர் சீத்தப்பட்டி பகுதியிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மணிமேகலை, இடைநிலை ஆசிரியை ரமாப்பிரியா. இவர்கள் இருவரும் நேற்று (அக்.21) பள்ளியில் பணி முடித்துவிட்டு அப்பகுதியில் மாரியம்மன் கோவிலை கடக்கும்போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இருவர் கத்தியைக்காட்டி மிரட்டி 7 1/2 சவரன் தங்க நகையை பறித்துக் கொண்டனர்.

தலைமை ஆசிரியை மணிமேகலை தங்க நகையை கொடுக்க மறுத்ததால் அவர் மீது கத்தியால் தாக்குதல் நடத்தி தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் ஆசிரியைகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல் துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:

பட்டியலின பெண் ஊராட்சித் தலைவரை செயல்படவிடாமல் தடுக்கும் துணைத் தலைவர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.