ETV Bharat / state

ஓய்வு பெற்ற செவிலியரை கொலை செய்த இருவருக்கு ஆயுள் தண்டனை - ஆயுள் தண்டனை

கரூர்: தாந்தோன்றிமலை பகுதியில் ஓய்வு பெற்ற செவிலியரை கொலை செய்து, உடலை எரித்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கரூர் மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

two-sentenced-to-life-imprisonment-for-killing-retired-nurse

author img

By

Published : Sep 8, 2020, 10:05 PM IST

கரூர் நகராட்சிக்குட்பட்ட தாந்தோன்றிமலை பகுதியில் வசித்து வந்த ஓய்வு பெற்ற அரசு மருத்துவமனை செவிலியர் ஜெயந்தி. இவர் கடந்த 2013ஆம் புதிதாக வீடுகட்டும் பணியின் போது, அருகிலுள்ள சிவ சுப்பிரமணியன் என்பவரது வீட்டிற்கு, சிறு சிறு கட்டுமான உதவியை செய்து வந்தார்.

இந்நிலையில், அவர் அணிந்திருந்த நகை மீது ஆசைப்பட்ட சிவ சுப்பிரமணியன், ஜெயந்தியை கழுத்து நெரித்து கொலை செய்து, அவர் அணிந்திருந்த தாலி, வலையல், தோடு ஆகியவற்றை கழட்டிவிட்டு, உடலை சாக்கு மூட்டையில் கட்டி, அவரது நண்பர் பிரபாகரன் என்பரது உதவியுடன், சுக்கலியூர் - செட்டிபாளையம் வனப்பகுதிக்கு எடுத்துச் சென்று பெட்ரோல் ஊற்றி எரித்தார்.

இது தொடர்பாக அப்பகுதி கிராம நிர்வாக அலுவலகர் கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த பசுபதிபாளையம் காவல்துறையினர், கொலை சம்பவத்தில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.

இது தொடர்பான வழக்கு கரூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இன்று (செப்.08) மீண்டு இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சசிகலா, குற்றவாளிகள் இருவருக்கும் ஆயுள் தண்டனையும், நகைகளை திருடிய குற்றத்திற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், கொலையை மறைத்த குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். இதனையடுத்து குற்றவாளிகள் இருவரையும் காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:பழவேற்காட்டில் 126 கிலோ போதை பொருள்கள் பறிமுதல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.