கரூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபானங்கள், கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பனை செய்துவருவதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அத்தகவலின் அடிப்படையில் இதுகுறித்து விசாரணை செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் காவல் துறையினர் ஈடுபட்டனர்.
தொடர்ந்து கிழக்கு தவிட்டுப்பாளையம் காவேரி ஆற்றங்கரை ஓரம் உள்ள ஆற்று படுகையில் காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது சசிகுமார் என்பவர் தனது இடத்தில் மண்பானை மூலம் 500 லிட்டர் சாராய ஊறல் செய்தது தெரியவந்தது.
காவேரி ஆற்றங்கரை ஓரம் உள்ள புகழூர் பகுதியில் காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது சசிகுமார் என்பவர் தனது இடத்தில் மண்பானை மூலம் 500 லிட்டர் சாராய ஊறல் செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவற்றை அழித்து, இது தொடர்பாக கண்ணன் (30), அஜித் (25) ஆகிய இருவரையும் கைதுசெய்தனர். மேலும் தலைமறைவான சசிக்குமாரை காவல் துறையினர் வலைவீசித் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: கரூரில் இறங்கு முகம் காட்டும் கரோனா தொற்று!