கரூர் மாவட்டம், செங்குந்தபுரம் பகுதியில் இருக்கக்கூடிய அதிமுக கட்சி அலுவலகத்தில் மாற்று கட்சியில் இருந்து விலகி அதிமுக கட்சியில் இணையும் நிகழ்ச்சி தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் திமுக, அமமுக போன்ற கட்சியிலிருந்து 24 நான்கு பேர் கட்சியில் முக்கிய நிர்வாகியாக இணைந்தனர். மேலும் 1000க்கும் மேற்பட்டோர் கட்சி அலுவலகத்தில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் அதிமுகவில் இணைத்துக்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், 'அதிமுக கட்சி நிலைக்குமா, நீடிக்குமா என்று ஏளனம் செய்தவர்கள் மத்தியில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி நடத்திவருகிறார். வருகின்ற 5ஆம் தேதி கரூர் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் உள்ள ஒரு கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க உள்ளார்.
அரவக்குறிச்சி எம்எல்ஏ செந்தில் பாலாஜி மீது நாங்கள் எந்த வழக்கும் தொடுக்கவில்லை. அவர் மீது உள்ள வழக்கானது அமைச்சராக இருந்த பொழுது சுமத்தப்பட்டது. செந்தில்பாலாஜி என்னைப் பார்த்து 441 என்று கிண்டலடிக்கிறார். அந்த அமாவாசைக்கு நாங்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் திருப்பி அடிப்போம்' என்றார்.
இதையும் படிங்க: 'வேளாண் மண்டலத் திட்டத்திற்கு மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும்' - வேல்முருகன்