ETV Bharat / state

ஓய்வூதிய உயர்வு வழங்காவிட்டால் 2024 தேர்தலில் தக்க பாடம் புகட்டுவோம் - ஓய்வூதியர் நல மீட்பு சங்கம்

அரசு போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு 2024 மக்களவைத் தேர்தலுக்குள் அகவிலைப்படி உயர்வை வழங்காவிட்டால், தேர்தலில் தக்க பாடம் புகட்டுவோம் என ஓய்வூதியர் நல மீட்பு சங்கத் தலைவர் கதிரேசன் தெரிவித்தார்.

tnstc pensioners
போக்குவரத்து ஓய்வூதியர்
author img

By

Published : Jul 21, 2023, 8:43 AM IST

"பென்ஷன் உயர்வு வழங்காவிட்டால் 2024 தேர்தலில் தக்க பாடம் புகட்டுவோம்" - ஓய்வூதிய சங்க தலைவர் கதிரேசன் சூளுரை

கரூர்: அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கத்தின் முப்பெரும் விழா கரூரில் நேற்று (ஜூலை 20) நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, கரூர் போக்குவரத்து மண்டல அலுவலகம் அமைந்துள்ள திருமாநிலையூர் பகுதியில் சங்க கொடி ஏற்று விழா மற்றும் சங்கத்தின் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

இதனையடுத்து ரூர் கடைவீதியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்ற கொள்கை விளக்க கூட்டத்தின்போது, அரசு போக்குவரத்து ஓய்வூதிய நல மீட்பு சங்கத்தின் மாநிலத் தலைவர் கதிரேசன் ஈடிவி பாரத் செய்திக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

அந்த பேட்டியில், "தமிழ்நாட்டில் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு நவம்பர் 2015 முதல் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் வழங்கியதை நிறைவேற்ற வேண்டும். ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் மருத்துவ காப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மூத்த குடிமக்களாக உள்ள போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு, மற்ற அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதைப்போல மாதம் தோறும் கடைசி நாளில் வழங்கும் நடைமுறையை கொண்டு வர வேண்டும். அரசு கருவூலம் மூலம் ஓய்வூதியத்தை வழங்கிட தமிழ்நாடு அரசே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 7வது கமிஷன் பணப் பலன்களை ஓய்வூதியத்தில் உயர்த்தி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் விலைவாசி உயர்வு, வயது முதிர்வு காரணமாக ஏற்படும் மருத்துவச் செலவுகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 8 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ள அகைவிலைப்படி உயர்வினை விரைவாக உயர்த்தி வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் ஓய்வூதியர்கள் சார்பாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் உத்தரவு வழங்கியும் நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து அரசு சார்பில் மேல்முறையீடு செய்தது திமுக அரசின் மீது ஓய்வூதியர்களுக்கு அதிருப்தியும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கில் எதிர்வரும் ஜூலை 28ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதியரசர் கூறிய நிலையில், தீர்ப்பு வழங்கும் நாள் நீதிமன்ற நடைமுறைப்படி பட்டியலில் வரப்படாமல் இன்று வரை காலதாமதப்படுத்தி வருவது, தமிழ்நாடு முழுவதும் உள்ள சுமார் 90 ஆயிரம் ஓய்வூதியர்களை வஞ்சிக்கும் செயலாகும்.

எனவே, தமிழ்நாடு அரசு தனது நிலைப்பாட்டை மாற்றி போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வூதியம் பெற்று வரும் தொழிலாளர்களின் நலனுக்கு எதிராக செயல்படுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் எதிர்வரும் 2024 மக்களவைத் தேர்தலில் ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்களின் குடும்பத்தினர் தக்க பாடம் புகட்டுவார்கள்.

மேலும், போக்குவரத்து கழகங்களில் ஊதிய பேச்சுவார்த்தையின்போது, பென்ஷன் டிரஸ்ட் கூட்டத்திலும் ஓய்வு பெற்ற தொழிற்சங்கங்களையும் அரசு அழைத்து பேச அனுமதிக்க வேண்டும். கடந்த 2003ஆம் ஆண்டு முதல் போக்குவரத்துக் கழகங்களில் வாரிசு அடிப்படையில் வேலைவாய்ப்பு என்பது நிறுத்தப்பட்டுள்ளது.

தற்போது போக்குவரத்து கழகங்களில் பணியின்போது மரணம் அடையும் போக்குவரத்து தொழிலாளர்களின் வாரிசுகளும் பாதிப்படைந்து வருகின்றனர். காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும்போது பணியில் உயிரிழந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கும் அரசு முன்னுரிமை வழங்க முன் வர வேண்டும்.

தமிழ்நாடு போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்களை அரசு நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். போக்குவரத்து துறையில் ஓய்வூதியர்கள் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றுவதற்கு அனுமதிப்பதை அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கம் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது" என தெரிவித்தார்.

மேலும், இந்த கூட்டத்தில் அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் தசரதராமன், பொருளாளர் ராஜேந்திரன் மாநில துணைத்தலைவர்கள் பாலசங்கர், சுப்பையன், மாநிலத் தலைமை நிலைய செயலாளர் சையது மொயீனுதீன், கரூர் மண்டல தலைவர் சக்திவேல் கௌரவத் தலைவர் சந்திரசேகர் மற்றும் ஈரோடு, தர்மபுரி, காஞ்சிபுரம், சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட மண்டல நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: சீனாவின் சவாலை சமாளிக்க இலங்கை இந்தியாவிடம் ஆதரவு - முன்னாள் இந்திய தூதர் பார்த்தசாரதி தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.