இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அனைவரும் பரவிவரும் கரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக வீட்டில் தங்களை பாதுகாத்துக் கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கரூர் மாவட்டம் தோகைமலை காவல் நிலையத்திற்குட்பட்ட சுக்காம்பட்டி, கருங்கல்பட்டி பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்சுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதையடுத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்திய தோகைமலை காவல்துறையினர், கருங்கல்பட்டி அருகே விவசாயத் தோட்டத்தில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சிய மூவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள் மூவரும், அதே பகுதியைச் சேர்ந்த செல்வகுமார், சின்ன காளை, பழனி சாமி என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் மூவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 20 லிட்டர் அளவிலான சாராய ஊறலை பறிமுதல் செய்துள்ளனர்.
இதையும் படிங்க:மீண்டும் ஒரு பொள்ளாச்சி சம்பவம்... வரிசையாக வரும் குற்றச்சாட்டுகள்!