ETV Bharat / state

திருமாவளவன் பிறந்தநாள் வாழ்த்து பேனர் கிழிப்பு

கரூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பிறந்தநாள் வாழ்த்து பேனர் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேனர் கிழிப்பு
பேனர் கிழிப்பு
author img

By

Published : Aug 10, 2021, 3:15 PM IST

கரூர்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்பியுமான தொல். திருமாவளவன் பிறந்தநாள் ஆகஸ்ட் 17ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக கரூர் மாவட்டம் முழுவதும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து விளம்பரங்கள் விசிகவினரால் வைக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், கரூர் திண்டுக்கல் சாலையில் உள்ள எஸ்பிஐ வங்கி எதிரே பிறந்தநாள் பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதனை அடையாளம் தெரியாத நபர்கள் கிழித்துவிட்டு சென்றிருக்கின்றனர்.

பேனரை கிழித்து சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி விசிக நிர்வாகிகள் கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

மேலும் சமூக வலைதளத்தில், திருமாவளவன் குறித்து அவதூறு பரப்பும் கரூரை சேர்ந்த அதிமுக தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி கோகுல் என்பவர் மீதும் நடவடிக்கை எடுக்க அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அதன் அமைப்பாளர் சுடர்வளவன் பேசுகையில், "விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொடர்ந்து மதவாத கும்பலுக்கு எதிராக பேசிவருவதால், இந்த அநாகரிகமான செயலில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிகழ்வை கட்சி வன்மையாக கண்டிக்கிறது. கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம்" என்றார்.

இதையும் படிங்க: திமுக அரசே மக்கள் நலப் பணிகளில் கவனம் செலுத்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.