கரூர் மாவட்டம், மாயனூர் காவல் எல்லைக்கு உள்பட்ட மணவாசி வளைவு சாலையில் உள்ள அரசு மதுபானக் கடை ஒன்றில், மே 9ஆம் தேதி துளையிட்டு, ஒரு குறிப்பிட்ட வகையிலான சுமார் 40 மது பாட்டில்களை மட்டும் திருடிச் சென்றனர்.
இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் சூழ்நிலையில், ஜூலை 11ஆம் தேதி புகலூர் அருகே உள்ள வேலாயுதம்பாளையம் பைபாஸ் சாலையில், மூலிமங்கலம் பிரிவு பகுதியில் இயங்கி வரும் அரசு மதுபானக் கடையில் முன்பக்க பூட்டை உடைத்து, 15 மதுபாட்டில்களை மட்டும் அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றுள்ளார்.
அரசு மதுபானக் கடைகளில் நுழையும் திருடர்கள் தங்களுக்குப் பிடித்த மது பாட்டில்களை மட்டும் தேவையான அளவு திருடிச் செல்லும் இந்த வினோத செயல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் காவல் துறையினர் வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: அரசு வாகனத்தில் சாராயம் கடத்தல் - அதிர்ச்சியடைந்த காவல்துறையினர்!